top of page

TNPSC பொது அறிவியல்: 100 முக்கிய ஒருவரி வினா-விடைகள் + வினாடி வினா

2 hours ago
3 min read

TNPSC Group 4, Group 2 பொது அறிவுப் பகுதியில் பொது அறிவியலிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கணிசமான வினாக்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சமச்சீர் அறிவியல் பாடநூல்களில் (6–10) உள்ள அடிப்படைத் தகவல்களே. இங்கே 100 ஒருவரி வினா-விடைகளை இயற்பியல், வேதியியல், உயிரியல், ஊட்டச்சத்து எனத் தொகுத்துள்ளோம். பக்கத்தின் இறுதியில் பயிற்சி வினாடி வினா உள்ளது.


முதலில் படிக்க வேண்டியவை

  • SI அலகுகள்: விசை – நியூட்டன், வேலை – ஜூல், திறன் – வாட், அழுத்தம் – பாஸ்கல்.

  • கண்டுபிடிப்பாளர்கள்: ராமன் விளைவு – சி.வி. ராமன், பென்சிலின் – ஃபிளெமிங், இரத்த வகைகள் – லேண்ட்ஸ்டெய்னர்.

  • அமிலங்கள்: எறும்பு – ஃபார்மிக், வினிகர் – அசிட்டிக், புளி – டார்டாரிக், எலுமிச்சை – சிட்ரிக்.

  • வைட்டமின் குறைபாடுகள்: A – மாலைக்கண், B1 – பெரிபெரி, C – ஸ்கர்வி, D – ரிக்கெட்ஸ்.

  • செல் உறுப்புகள்: ஆற்றல் நிலையம் – மைட்டோகாண்ட்ரியா, தற்கொலைப் பை – லைசோசோம்.


1. இயற்பியல்


வினா

விடை

விசையின் SI அலகு

நியூட்டன் (N)

வேலையின் SI அலகு

ஜூல் (J)

திறனின் SI அலகு

வாட் (W)

அழுத்தத்தின் SI அலகு

பாஸ்கல் (Pa)

அதிர்வெண்ணின் SI அலகு

ஹெர்ட்ஸ் (Hz)

மின்னோட்டத்தின் SI அலகு

ஆம்பியர் (A)

மின்தடையின் SI அலகு

ஓம் (Ω)

மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு

வோல்ட் (V)

வெப்பநிலையின் SI அலகு

கெல்வின் (K)

மின் ஆற்றலின் வணிக அலகு

கிலோவாட் மணி (kWh)

1 kWh =

3.6 × 10⁶ ஜூல்

வெற்றிடத்தில் ஒளியின் வேகம்

3 × 10⁸ மீ/வி

புவியீர்ப்பு முடுக்கம் (g)

9.8 மீ/வி²

மனிதர் கேட்கும் ஒலியின் அதிர்வெண்

20 Hz – 20,000 Hz

20,000 Hz-க்கு மேல் உள்ள ஒலி

மீயொலி (Ultrasonic)

20 Hz-க்குக் கீழ் உள்ள ஒலி

குற்றொலி (Infrasonic)

கிட்டப்பார்வையைச் சரிசெய்யும் லென்ஸ்

குழி லென்ஸ்

தூரப்பார்வையைச் சரிசெய்யும் லென்ஸ்

குவி லென்ஸ்

வானம் நீல நிறமாகத் தெரியக் காரணம்

ஒளிச் சிதறல்

நீரின் அடர்த்தி அதிகமாக உள்ள வெப்பநிலை

4°C

தனிச்சுழி வெப்பநிலை (0 K)

−273.15°C

மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்

மைக்கேல் ஃபாரடே

ஈர்ப்பு விதியைக் கூறியவர்

ஐசக் நியூட்டன்

X-கதிர்களைக் கண்டறிந்தவர்

வில்ஹெல்ம் ராண்ட்ஜன்

கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்

ஹென்றி பெக்கரல்

ராமன் விளைவைக் கண்டறிந்தவர்

சி.வி. ராமன்

தேசிய அறிவியல் நாள்

பிப்ரவரி 28

மின் உருகு இழையின் (fuse) பண்பு

குறைந்த உருகுநிலை

மின்னாக்கி மாற்றுவது

இயந்திர ஆற்றல் → மின் ஆற்றல்

மின்மோட்டார் மாற்றுவது

மின் ஆற்றல் → இயந்திர ஆற்றல்


2. வேதியியல்


வினா

விடை

சமையல் உப்பு

சோடியம் குளோரைடு (NaCl)

சமையல் சோடா

சோடியம் பைகார்பனேட் (NaHCO₃)

சலவை சோடா

சோடியம் கார்பனேட் (Na₂CO₃·10H₂O)

சலவைத் தூள் (Bleaching powder)

கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl₂)

பாரிஸ் சாந்து

கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்

சுண்ணாம்புக்கல்

கால்சியம் கார்பனேட் (CaCO₃)

சிரிப்பூட்டும் வாயு

நைட்ரஸ் ஆக்சைடு (N₂O)

உலர் பனிக்கட்டி

திட கார்பன் டை ஆக்சைடு

காற்றில் அதிகம் உள்ள வாயு

நைட்ரஜன் (சுமார் 78%)

காற்றில் ஆக்சிஜனின் அளவு

சுமார் 21%

தூய நீரின் pH மதிப்பு

7

இரைப்பையில் சுரக்கும் அமிலம்

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

எறும்புக் கடியில் உள்ள அமிலம்

ஃபார்மிக் அமிலம்

வினிகரில் உள்ள அமிலம்

அசிட்டிக் அமிலம்

புளியில் உள்ள அமிலம்

டார்டாரிக் அமிலம்

எலுமிச்சையில் உள்ள அமிலம்

சிட்ரிக் அமிலம்

தயிரில் உள்ள அமிலம்

லாக்டிக் அமிலம்

தனிம வரிசை அட்டவணையின் தந்தை

மெண்டலீஃப்

நவீன தனிம வரிசை அட்டவணையின் அடிப்படை

அணு எண்

அறை வெப்பநிலையில் திரவமான உலோகம்

பாதரசம்

மிக இலகுவான தனிமம்

ஹைட்ரஜன்

மின்சாரம் கடத்தும் அலோகம்

கிராஃபைட்

வைரமும் கிராஃபைட்டும்

கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்

கால்வனைசிங்

இரும்பின் மேல் துத்தநாகப் பூச்சு

பித்தளை

தாமிரம் + துத்தநாகம்

வெண்கலம்

தாமிரம் + வெள்ளீயம்

LPG-யின் முக்கியக் கூறு

பியூட்டேன்

CNG, உயிர்வாயுவின் முக்கியக் கூறு

மீத்தேன்

அமில மழைக்குக் காரணமான வாயுக்கள்

சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள்


3. உயிரியல்


வினா

விடை

செல்லின் ஆற்றல் நிலையம்

மைட்டோகாண்ட்ரியா

செல்லின் தற்கொலைப் பைகள்

லைசோசோம்

செல்லின் புரதத் தொழிற்சாலை

ரைபோசோம்

ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம்

பசுங்கணிகம் (குளோரோபிளாஸ்ட்)

ஒளிச்சேர்க்கையில் வெளியாகும் வாயு

ஆக்சிஜன்

செல்லைக் கண்டறிந்தவர்

ராபர்ட் ஹூக்

மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி

கல்லீரல்

மனித உடலின் நீளமான எலும்பு

தொடை எலும்பு (ஃபீமர்)

மனித உடலின் மிகச்சிறிய எலும்பு

அங்கவடி (ஸ்டேப்ஸ்)

முதிர்ந்த மனிதரின் எலும்புகள்

206

மனித இதயத்தின் அறைகள்

4

இயல்பான உடல் வெப்பநிலை

37°C (98.6°F)

இயல்பான இரத்த அழுத்தம்

120/80 mmHg

இரத்தச் சிவப்பணுக்களின் ஆயுள்

சுமார் 120 நாட்கள்

அனைவருக்கும் கொடுக்கும் இரத்த வகை

O

அனைவரிடமும் பெறும் இரத்த வகை

AB

இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்

இன்சுலினைச் சுரக்கும் உறுப்பு

கணையம்

சிறுநீரகத்தின் செயல் அலகு

நெஃப்ரான்

நரம்பு மண்டலத்தின் அலகு

நியூரான்

மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை

46 (23 இணைகள்)

மரபியலின் தந்தை

கிரிகர் மெண்டல்

DNA இரட்டைச் சுருள் மாதிரி

வாட்சன், கிரிக்

பரிணாமக் கொள்கை

சார்லஸ் டார்வின்

பென்சிலினைக் கண்டறிந்தவர்

அலெக்சாண்டர் ஃபிளெமிங்

போலியோ தடுப்பூசி

ஜோனாஸ் சால்க்

பெரியம்மைத் தடுப்பூசி

எட்வர்ட் ஜென்னர்

மலேரியாவைப் பரப்புவது

பெண் அனாஃபிலிஸ் கொசு

டெங்குவைப் பரப்புவது

ஏடிஸ் கொசு

காசநோய்க்குக் காரணம்

பாக்டீரியா

எய்ட்ஸ் நோய்க்குக் காரணம்

HIV வைரஸ்


4. ஊட்டச்சத்து, குறைபாட்டு நோய்கள்


வினா

விடை

வைட்டமின் A குறைபாடு

மாலைக்கண் நோய்

வைட்டமின் B1 குறைபாடு

பெரிபெரி

வைட்டமின் C குறைபாடு

ஸ்கர்வி

வைட்டமின் D குறைபாடு

ரிக்கெட்ஸ்

இரத்தம் உறைதலுக்கு உதவும் வைட்டமின்

வைட்டமின் K

சூரிய ஒளியில் உடலில் உருவாகும் வைட்டமின்

வைட்டமின் D

அயோடின் குறைபாடு

முன்கழுத்துக் கழலை

இரும்புச்சத்துக் குறைபாடு

இரத்தசோகை

இன்சுலின் குறைபாட்டால் வரும் நோய்

நீரிழிவு

கால்சியம் அதிகம் தேவைப்படும் உறுப்புகள்

எலும்புகள், பற்கள்


பயிற்சி வினாடி வினா

பகுதியையும் வினாக்களின் எண்ணிக்கையையும் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யுங்கள். இறுதியில் தவறியவற்றை மட்டும் மீண்டும் செய்யலாம்.



இதையும் படியுங்கள்

பொதுத்தமிழ் கலைச்சொற்கள் 231 + வினாடி வினா: TNPSC கலைச்சொற்கள்

எல்லாப் பாடங்களும்: பொது அறிவியல் பகுதி · இலவச PDF பகுதி

Recent Posts

See All
TNPSC கலைச்சொற்கள்: பள்ளிப் பாடநூல் அடிப்படையில் 231 கலைச்சொற்கள் + வினாடி வினா

TNPSC கலைச்சொற்கள்: சமச்சீர் தமிழ்ப் பாடநூல் (6–12) கலைச்சொல் அறிவோம் அடிப்படையில் 231 ஆங்கிலம்–தமிழ் கலைச்சொற்கள், தலைப்பு வாரியாக, இலவசப் பயிற்சி வினாடி வினாவுடன். Group 4, Group 2 பொதுத்தமிழ் தேர்வ

 
 
 

Comments


tnpscbestbooks.com
ARG Complex, Anbu Nagar-II, Namakkal, Tamil Nadu – 637003 9600777509     tnpscbestbooks@gmail.com

bottom of page
🆕 இலவசம்: 1000 இந்திய வரலாறு ஒருவரி வினா-விடைகள்★📘 குரூப் 4 படிப்புத் திட்டம்★📝 இலவச மாதிரித் தேர்வு★🚚 இலவச டெலிவரி
📚 புத்தகங்கள் வாங்க WhatsApp-இல் ஆர்டர் செய்ய
அனைத்துப் பதிவுகளும் →
அனைத்து நடப்பு நிகழ்வுகளும் →
TNPSC BEST BOOKS
tnpscbestbooks.com